ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..!

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக  பொதுமக்கள் குற்றச்சாட்டு..!
X
திருநகர் பகுதியில், அமைந்துள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு:



மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் ஏ. 2822 எண் கொண்ட கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடை மதுரை திருநகர் பூங்கா அருகே அமைந்துள்ளது .

இந்த கடையில், நேற்றைய தினம் காலை அதே பகுதியை சேர்ந்தவர் தனது குடும்ப அட்டையை பயன்படுத்தி, சீனி வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்தவுடன் அந்த சீனியை தன் வீட்டில் உபயோகப்படுத்தும் பாத்திரத்தில் கொட்டியுள்ளார். அப்பொழுது, சீனி கட்டி கட்டியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னைப்போல் தன் வீட்டின் அருகே உள்ள பலரும் ஏமாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது போன்ற நிலை தொடரக் கூடாது என்றும், இது சீனியா இல்லை, கல்லா என்று பொதுமக்கள் புலம்பினர் . தமிழக முதல்வர், இதுபோன்று தரமற்ற பொருட்களை வினியோகம் செய்யும் ரேஷன் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!