மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்
X

மாநகராட்சி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை மேயர் இந்திராணி பொன் வசந்த் வழங்கினார்

மதுரை மாநகராட்சியில் பல்வேறு பள்ளி களைச் சேர்ந்த, மொத்தம் 367 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மேயர் வழங்கினார்

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மதுரை மாநகராட்சி மேயர் வழங்கினார்.

மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு,தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை,மேயர் இந்திராணி பொன்வசந்த்,ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர் வழங்கினார்கள்.

மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 2023 ஆம் ஆண்டுக்குரிய தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் 619 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக, மண்டலம் 2 காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 162 மாணவிகளுக்கும் பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 205 மாணவிகளுக்கும் என மொத்தம் 367 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் வழங்கினார்.இந்நிகழ்வில், கல்விக்குழு தலைவர் இரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் விஜயமௌசுமி, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!