மதுரை அருகே மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு வியாபாரம் தொடங்க பாத்திரம் வழங்கல்

மதுரை அருகே மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு வியாபாரம் தொடங்க பாத்திரம் வழங்கல்
X

மதுரையிலுள்ள மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு  தொழில் செய்ய உதவிய அறக்கட்டளை நிர்வாகி மணிகண்டன்

உலக மனிதர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் சக மனிதர்களின் வாழ்க்கை நிலை உயர இயன்ற உதவிகளை செய்தாலே உலகில் வறுமையே இருக்காது

மதுரை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இட்லி கடைக்கான பாத்திரங்கள் அறக்கட்டளை வழங்கியது.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் மதுரை திருநகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி உமாராணிக்கு இட்லிகடை நடத்த பாத்திரங்கள் வழங்கப்பட்டது

இது தொடர்பாக மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: இட்லி கடை நடத்த மாற்றுத்திறனாளி பெண் உமாராணி விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் சுயதொழில் செய்து குடும்ப சூழலை உயர்த்த ஊக்குவிக்கும் வகையில், எனது தனிப்பட்ட சேமிப்பு மூலம், இட்லிகடைக்கான பாத்திரங்கள் வாங்கப்பட்டது. இவற்றை உலக வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வழங்கினோம். இதேபோல், உலக மனிதர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் சக மனிதர்களின் வாழ்க்கை நிலை உயர தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே உலகில் வறுமையே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றார். இந்நிகழ்வில், சமூக ஆர்வலர்கள் கண்ணன், பெரியதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business