டெல்லி அருகே போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் போராட்டம்
டெல்லி அருகே போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் தமிழக ஜனநாயக மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பஞ்சாப்,அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக பெரிய அளவில் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 13ந்தேதி டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களது பேரணி டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் போலீசார் ரப்பர் குண்டு துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தற்போது போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக , விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட ச்செயலாளர் ஜலால் முகமது தலைமையில் மதுரையில் போராட்டம் நடைபெற்றது.
இதில், பொருளாளர் முபாரக் அலி, பழனி பாபா பேரவை மாவட்டச் செயலாளர் ஜபாருல்லா,மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன் குமார், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் ராஜா உள்ளிட்ட பலர் மதுரை ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ரயில் மறியல் செய்ய முயன்றவர்களை திலகர் திடல் காவல் உதவி ஆணையர் ராமக்கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, எஸ்.ஐ.க்கள் மருதலட்சுமி, பரமசிவம் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu