தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்: கல்வி அமைச்சரிடம் இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு அளித்தனர்.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் , அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய மாணவர் சங்கம் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தனியார் பள்ளிகளில் வசூலிக்கும் கட்டாய கல்விக்கட்டணம் செயலில் நடவடிக்கைக் கோரி
மாநில துணைத் தலைவர் கண்ணன் தலைமையில் புறநகர் மாவட்டச் செயலாளர் பிருந்தா, மாநகர் மாவட்டத் தலைவர் க. பாலமுருகன் செயலாளர் வேல்தேவா விருதுநகர் மாவட்டத் தலைவர் சமயன் மாவட்ட குழு உறுப்பினர் அபிநயா, டிலன் ஆகியோர் மனு அளித்தார்கள் .
மனுவில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசால் அறிவித்துக்கப்பட்டுள்ளது . இந்த அறிவிப்பை இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம் .
அனைத்து மாணவர்கள் தேர்ச்சி என்றாலும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டாய கல்விக்கட்டணம் செலுத்த வலியுறுத்துகின்றனர் .
மாணவர்களிடம் கல்விக்கட்டணம் 75 % மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசாங்கம் அறிவித்தது . அக்கட்டணத்தை இரண்டு தவணையாக வசூலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியது .
இந்நடைமுறையை எந்த தனியார் பள்ளியும் கடைப்பிடிக்கவில்லை . கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் 50 % கல்விக் கட்டணம் தனியார் பள்ளிகளில் செலுத்திய நிலையில் , தற்பொழுது மீண்டும் 50 சதவீதமான கட்டணத்தையும் செலுத்தினால் மட்டுமே உங்கள் பிள்ளைகள் அடுத்த வகுப்பிற்கு செல்லமுடியும் என்று மிரட்டுகிறார்கள் .
அதேபோன்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 % த்தில் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களிடமும் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது . கல்விக் கட்டணம் என்ற பெயரில் எவ்வித ரசீதும் கொடுக்காமல் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து கட்டண கொள்ளை நடைபெறும் சூழல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது .
தமிழகத்தில் மெட்ரிக் , சி.பி.எஸ்.இ. , உள்ளிட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி என்பது அமைக்கப்பட்டுள்ளது .
இந்த கமிட்டியின் மூலம் அறிவித்த அறிவிப்புகள் , அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது . அரசின் உத்தரவுகளை தனியார் பள்ளிகள் ஒருபோதும் அவற்றை மதிப்பதில்லை .
இந்நிலையில் , தாங்கள் மாணவர்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்க அப்பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu