போலீஸார் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்ட வடநாட்டு கொள்ளையன் கைது
போலீஸ் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையன்.
தென்தமிழகத்தில் சாலையில் தனியாக நகை அணிந்து நடந்து செல்லும் பெண்கள் மற்றும் மூதட்டியிடம் தங்களை காவல்துறையினர் போல் அறிமுகம் செய்து நடித்து நூதன முறையில் நகைகளை ஏமாற்றி திருடிச் செல்லும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறியது.
குறிப்பாக, இந்த கும்பல் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதே போன்று கைவரிசையை காட்டி காவல்துறைக்கு போக்குக் காட்டியது.
இதுகுறித்து, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து நூதன முறையில் நகை கொள்ளை திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கினர்.
இந்த நிலையில், மதுரை வில்லாபுரம் பகுதியில் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த 52 வயது மூதாட்டியிடம் தங்களை காவல்துறையினர் என்று கூறி தனியாக வெளியில் நடந்து செல்பவர்கள் நகைகளை அணிந்து வரக்கூடாது என்று அறிவுரை கூறியுள்ளனர். மேலும், நகைகளை பத்திரமாக கழற்றி தங்களிடம் கொடுக்க சொல்லியுள்ளனர்.
அதை நம்பி மூதாட்டியும் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, ஒரு பேப்பரில் வைத்து மூதாட்டியிடம் கொடுத்து உங்கள் பைக்குள் வைக்க சொல்லிவிட்டு அந்த நகையை நூதன முறையில் திருடிச்செல்ல முயன்றனர்.
சுதாரித்துக் கொண்டு அந்த மூதாட்டி அந்த பேப்பரை திறந்து பார்த்த போது, கற்கள் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக மூதாட்டி கூச்சலிட அவ்வழியாக பணிக்குச் சென்ற தனிப்படை சார்பு ஆய்வாளரிடம் மூதாட்டி நடந்ததைக் கூறிய நிலையில் பணிக்கு சென்ற தனிப்படை சார்பு ஆய்வாளர் அவர்களை பிடிக்க முற்பட்டார்.
அதில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட மற்றொருவரை கையும் களவுமாக துரத்திப் பிடித்து. பொதுமக்கள் உதவியுடன் அவனை கட்டி வைத்தனர்.
பொதுமக்கள் உதவியுடன் பிடித்தவனை அவனியாபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவன், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகம்மதுஅலி என்பதும் தெரியவந்தது. அவனுடன் வருகை தந்த மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பட்டப்பகலில் போலீஸ் போன்று நடித்து நூதன முறையில் நகை திருட முயன்று உண்மையான போலீசிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,
போலீஸ் என்று கூறி சாலையில் தனியாக நடந்து செல்லும் அப்பாவி பெண்களிடம் நூதன முறையில் நகைகளை திருடும் இந்த நபர்கள் தனியாக அல்லது கும்பளாக செயல்படுகிறார்களா.? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu