உசிலம்பட்டி அருகே கண்மாய் தூர்வாரும் பணி : எம்.எல்.ஏ தொடக்கி வைத்தார்..!

உசிலம்பட்டி அருகே கண்மாய் தூர்வாரும் பணி : எம்.எல்.ஏ தொடக்கி வைத்தார்..!
X

தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அய்யப்பன்.

உசிலம்பட்டி அருகே கண்மாய் தூர்வாரும் பணியை எம்எல்ஏ அய்யப்பன் தொடங்கி வைத்தார்.

கண்மாய் தூர்வாரும் பணி:

உசிலம்பட்டி.

மதுரை, உசிலம்பட்டி அருகே தன்னார்வ அமைப்புகளால் கண்மாய் தூர்வாரும் பணி - எம்எல்ஏ அய்யப்பன் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி கிராமத்தில் உள்ளது பந்தானி கண்மாய். இக்கண்மாய் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த கண்மாயை தூர்வார உசிலை நகர அரிமா சங்கம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், உசிலை வளர்ச்சி மையம், 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் இனைந்து இப்பணிகளை தொடங்கியுள்ளனர்.நேற்று தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது.

அரிமா சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் பொறியாளர் அறிவழகன் தலைமையில், பசுக்காரன்பட்டி ஊர் மக்கள் முன்னிலையில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்.விரைவில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள பல தன்மைகளை இதே போன்று சுத்தம் செய்ய இருப்பதாகவும் எம் எல் ஏ தெரிவித்தார்.இதில் உசிலை வளர்ச்சி மையம்,தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய நிர்வாகிகள், அரிமா சங்கத்தினர், 58 கிராம பாசன விவசாயிகள் எக்னோரா நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!