மருது சகோதரர்கள் உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
மதுரை மாவட்டம், சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவரும், எம். வி. எம். கலைவாணி, பள்ளி தாளாளரும் பேரூராட்சி கவுன்சிலருமான எம் மருதுபாண்டியன், ராமேஸ்வரத்தில் உள்ள மருது சகோதரர்கள் உருவச்சிலைக்கு குரு பூஜையை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார்
1801-ம் ஆண்டு இதே அக்டோபர் 24-ம் நாள் சிவகங்கை திருப்பத்தூரின் மையப்பகுதியில் துாக்குக் கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருந்தனர் மருது சகோதரர்கள். துாக்குக் கயிற்றை மாட்ட வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களிடம் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்.
தாங்கள் கட்டியாண்ட சிவங்கைச் சீமை மண்ணிலே கைதியாக நின்ற மருது சகோதரர்கள் " எங்களுக்கு நீங்கள் எந்த தயவும் காட்டவேண்டாம். நாங்கள் எங்கள் நாட்டைக் காப்பாற்ற போரிட்டு உங்களிடம் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். எங்கள் உயிரை பறிக்கும் உரிமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள். எங்கள் உயிரை பறித்ததும், எங்கள் உடலை காளையார் கோவிலில் நாங்கள் கட்டிய கோபுரத்துக்கு எதிரில் புதைத்துவிடுங்கள்.
இது எங்கள் மரண சாசனமாக கூட நீங்கள் எடுத்துகொள்ளலாம் என்று சிறிதும் தயக்கமின்றி தங்கள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் போகப்போகின்றது என்பதை அறிந்தும் எந்த பதறdறமும் இல்லாமல் ஆங்கிலேயர்களிடம் கூறினார்கள். வீரத்தின் விளை நிலமாக விளங்கிய மருது சகோதரர்கள்தான் அவர்கள். அவருக்கு உதவியாக இருந்தார்கள் என்று ஐநுாறு பேரையும் (அக்.24) துாக்கில் ஏற்றினார்கள் ஆங்கிலேயர்கள். இதையடுத்து மருது சகோதர்கள் விருப்பபடி காளையார்கோவில் எதிரே இருவரது உடலையும் ஆங்கிலேயர்கள் மூன்று நாள் கழித்து (அக்.27)அடக்கம் செய்தனர்.
அடக்கம் செய்த நாளில் காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களுக்கு 221 -ஆவது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். இதன் தொடர்ச்சியாக,காளையார்கோவிலில் நடந்த மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சமயநல்லூரில் மாமன்னர் மருதுபாண்டியர் குரு பூஜை விழாவிற்கு காளையார் கோவில் செல்வதற்காக வருகை புரிந்த, முன்னாள் முதல்வரும் தமிழக எதிர் கட்சி துணை தலைவருமான ஓ. பன்னீர்செல்வம், மதுரை மாநகர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் வரவேற்பு கொடுத்தனர் .
இதில், மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், புறநகர் மாவட்ட செயலாளர் முருகேசன், பாஸ்கரன் மற்றும் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் உட்பட கட்சியினர் ஏராளமான கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர்.
காரியாபட்டியில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு :
காரியாபட்டி முக்குலத்தோர் உறவின் முறை சார்பாக, மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற்றது. உறவின்முறை தலைவர் அய்யாவுத்தேவர் தலைமை வகித்தார். செயலாளர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருது பாண்டியர்கள் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
ஒன்றியக்குழுத் தலைவர் பொன்னுத்தம்பி ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், பேரூராட்சித் தலைவர் செந்தில் , மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக் கவுன்சிலர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி ஒன்றிய துணை செயலாளர் குருசாமி திமுக பிரமுகர் வாலை.முத்துசாமி, கவுன்சிலர்கள் முகமது முஸ்தபா சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டி தீபா நாகஜோதி, செல்வராஜ் உறவின்முறை பொருளாளர் அர்ச்சுணன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: மதுரை மாவட்டம், சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவரும், எம். வி. எம். கலைவாணி, பள்ளி தாளாளரும் பேரூராட்சி கவுன்சிலருமான எம் மருதுபாண்டியன், ராமேஸ்வரத்தில் உள்ள மருது சகோதரர்கள் உருவச்சிலைக்கு குரு பூஜையை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம், இதனைத் தொடர்ந்து,ராமேஸ்வரம் நகர அகமுடையார் சங்க நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu