தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமியை திட்டிய நபரிடம் போலீஸார் விசாரனை

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமியை திட்டிய நபரிடம் போலீஸார் விசாரனை
X

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திட்டிய  பயணி

எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியதாக, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்

முன்னாள் முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தபோது துரோகியுடன் பயணம் செய்கிறோம் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திட்டிய வாலிபரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து, விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.அவரை, மதுரை மாவட்ட அதிமுக சார்பில் ,முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ-க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், இளைஞர் ஒருவர், எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியதாக, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

முதல் கட்ட விசாரணையில், அவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக. மதுரை வந்த சிங்கம்புணரி அருகேயுள்ள எம்.வையாபுரிபட்டி கிராமத்தை சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன்(42). என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். பின்னர், விமானத்தில் வந்தவர்கள் பேருந்தில் வந்தபோது செல்போனில் வீடியோ எடுத்து, துரோகியுடன் பயணம் செய்கிறோம். சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீத இடஒதுக்கிடு வழங்கி தென் மாவட்ட மக்களுக்கு துரோகம் எனக் கூறி பேஸ்புக் -கில் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் ராஜேஸ்வரன் செல்போனை பறித்து, விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்பத்தனர்.இதனால், மதுரை விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது. எடப்பாடி தரப்பில் புகார் அளிக்காததால் போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

Tags

Next Story