மதுரை அருகே சாலை விபத்தில், காவல் உதவி ஆய்வாளர் மரணம்

மதுரை அருகே சாலை விபத்தில், காவல் உதவி ஆய்வாளர் மரணம்
X

சாலை விபத்தில் இறந்த காவல் உதவி ஆய்வாளர்.

தனது டூவீலரில் திண்டுக்கல்லில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்

மதுரை துவரிமான் விளக்கு பகுதியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை துவாரிமான் விலக்கு பகுதியில், திண்டுக்கல்லில் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் 51 வயதான செல்லப்பாண்டி.

இவர், திண்டுக்கல்லில் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.இவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகில் உள்ள சோலைகொண்டான்பட்டிக்கு செல்வதற்காக, தனது டூவீலரில் திண்டுக்கல்லில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் பகுதியில் வந்தபோது,கீழ மாத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளி வாகனம் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு, சாலையை கடப்பதற்காக ஏற்கெனவே, அப்பள்ளியின் பேருந்து நின்று கொண்டிருந்தது.

சொந்த ஊர் சென்று கொண்டிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்லப்பாண்டி பள்ளி பேருந்தை கடக்க முற்பட்டபோது, அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு பேருந்து , வேகமாக சாலையை கடக்க முயன்ற சிறப்பு சார்பு ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தில் மோதியது.இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சார்பு ஆய்வாளர் கால் துண்டானது.

காயமடைந்த சார்பு ஆய்வாளரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, நாகமலை புதுக்கோட்டை போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து , பேருந்து இயக்கி வந்த மதுரையை சேர்ந்த பிரசாத் என்பது தெரிய வந்தது தற்போது, இந்த விபத்தினுடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.இந்த இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இது காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனைவி 2 மகன்கள். உள்ளனர் .

துவரிமான் விளக்கு பகுதியில் பள்ளிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தனியார் குடியிருப்புகள் அதிகளவு இருப்பதால், அப்பகுதியில் முறையான சாலை பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அப்பதியில் பேரிகாடுகள் அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business