தமிழகத்தில் சிறிய கோயில் ஊழியர்களின் அவல நிலை: அரசு கவனிக்குமா?

தமிழகத்தில் சிறிய கோயில் ஊழியர்களின் அவல நிலை: அரசு கவனிக்குமா?
X

தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு.

தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி நிரந்தரம் செய்யப் படாமல் பணிபுரிந்து வருகின்றனர்

தமிழகத்தில் முதுநிலை அல்லாத கோயில்களில் பணிபுரியும் பணியாளர்கள் அவலநிலை போக்க அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத திருக்கோயில் எனப் பிரிக்கப்படுகிறது. முதுநிலை கோயில்கள் என்பது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு கருமாரியம்மன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் திருக்கோயில், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட முதுநிலைக் கோயில்களும்முதுநிலை அல்லாத கோயில்களும் உள்ளன.

இக்கோயில் பணிபுரியும் பணியாளர்கள் முதுநிலை கோயில் பணிபுரியும் பணியாளருக்கு ஒரு சம்பளமும், முதுநிலை அல்லாத கோயில் பணிபுரியும் பணியாளர் ஒரு வித சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில கோயில்களில் பணியாளருக்கு மாத ரூபாய் 500 முதல் 1500 வரை மட்டுமே பல ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் 20- ஆண்டுகளுக்கு மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் பணிபுரிந்து வருகின்றனர்.

சில கோயிலில் பணியாளர்கள் சம்பளம் வழங்கப்படும் போது சம்பள பதிவேட்டில் கையெழுத்து இடப்படுவதும், இன்னும் சில கோயில்களில் பணியாளருக்கு வவுச்சரில் கையெழுத்து வாங்கி பல ஆண்டுகளாக சம்பளம் வழங்கும் நிலையும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டு உள்ள கோயில்களில் தொடர்ந்து, கோவில் அர்ச்சகர் ,காவலர், தூய்மைப் பணியாளர், பரிசாதகர் ஆகியோருக்கு குறைவான சம்பளமும், அதே கோவில் பணிபுரியும் எழுத்தர், கணக்கர் ஆகியோருக்கு ஒரு சம்பளமும் அறநிலையத் துறை அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

இன்னும் சில கோயில்களில் பணியாளர்களுக்கு சர்வீஸ் புக் கூட தொடக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கோயில்களில் தக்கார் மற்றும் அறங்காவலர் கள் தீர்மானத்தால், பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாக தான் பணியாளர்களுக்கு ஆணையாளர், பணி நியமனை ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் சம்பள நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது. தக்கார் மற்றும் பரம்பரை அறங்காவலர், அறங்காவ லர்களால், நியமிக்கப்பட்ட பணியாளருக்கு குறைவான சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, அறநிலையத் துறை துணை மற்றும் இணை ஆணையாளர்கள் கோயிலில் ஆய்வு செய்து மிகக் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க ஆவண செய்ய கோவில் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறநிலையத் துறை அமைச்சரும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதும் கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கையாகும். ஆகவே, குறைவான சம்பளம் பெற்று பணி நிரந்தரம் செய்ய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மண்டல இணை ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story