மதுரை அருகே பசுவின் வயிற்றிலிருந்து 50 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
மதுரை கால்நடை மருத்துவ குழுவினர் பசுவின் வயிற்றில் 50 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்
மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு சொந்தமான பசுவுக்கு கடந்த 2 வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னரும் அந்த பசு மாடு குணமடையவில்லையாம்.
இதனத்தொடர்ந்து ,அவர் தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனைக்கு பசுமாட்டை அழைத்து வந்தார். கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, பசுவின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் சேர்ந்து இருப்பது தெரிய வந்தது.
அறுவை சிகிச்சை மூலம் பிளாஸ்டிக் பைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. முதன்மை டாக்டர் வைரவசாமி தலைமையில் உதவி டாக்டர்கள் முத்துராமன், அறிவழகன், விஜயகுமார், முத்துராம் மற்றும் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது, அந்த பசுவின் வயிற்றில் 50 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், நாணயங்கள், ஆணி போன்ற பல பொருட்களும் இருந்தன. அவற்றை டாக்டர்கள் அகற்றினர். இந்த அறுவை சிகிச்சையானது, சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடந்தது. தற்போது, அந்த பசு தல்லாகுளம் பன்முக மருத்துவமனையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது என, மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu