சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
X

சோழவந்தான் பேரூராட்சி சார்பில்  மேற்கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்படி பேரூராட்சிபகுதியில் மஞ்சப்பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் படி பேரூராட்சி பகுதியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் மற்றும் மஞ்சப்பைகளை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதற்காக, தினசரி சந்தை பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என, உறுதிமொழி எடுத்துக் கொண்டு அனைத்து கடைதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், தவிர்க்க நிலையான மாற்றத்தினை ஏற்படுத்திட அதற்கு தேவையான மாற்றுப் பொருட்களைகொள்முதல் செய்து அனைத்து கடைகளிலும் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

பேரூராட்சி மன்றத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!