மதுரை அருகே கோயில் கும்பாபிஷேகம் நடத்தக் கோரி கிராம மக்கள் மனு
கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்
15 ஆண்டுகள் மேல் ஆகியும் கோவில் குடமுழுக்கு நடைபெறாமல் இருக்கும் கோவில் குடமுழுக்கு விழா நடக்க வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான அரசபட்டி கிராமத்தில் வெயில்உகந்த அம்மன் கோவில் கட்டி முடித்த நிலையில் இதுவரை குடமுழக்கு விழா நடைபெறவில்லை என்று ,கிராமப் பொதுமக்களும் ஊர் பெரியவர்களும் கூறி வருகின்றனர்.
வளையங்குளம், அரசபட்டி,வீர பெருமாள் பட்டி ஆகிய மூன்று ஊர்களுக்கும் பாத்தியப்பட்ட கோவில் ஆகும். வெயில் உகந்த அம்மன் கோவில் 85 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதற்குப் பிறகு கோவிலை புதுப்பித்து புதிதாக கட்டடம் எழுப்பி கோவில் குடமுழுக்கு விழா நடைபெற வேண்டும் என்று, ஊர் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், கோவில் கட்டி முடித்தும் இன்னும் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறவில்லை. இதனால், ஊர்க்காரர்களுக்குள் சண்டை சச்சரவு இருப்பதால், இந்த கோவில் அறநிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த கோவிலுக்கு, சுமார் 2000 தலைகட்டு உள்ளது. அப்படி இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தித் தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் கள்ளிக்குடி வட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் மூன்று கிராம சபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், எந்த ஒரு பயனும் இல்லை என்று ஊர் பெரியவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் கேட்ட பொழுது எங்கள் ஊரில் அமைந்துள்ள இந்த கோவில் கட்டப்பட்டு முடித்த நிலையில் உள்ளது. இதற்கு உடனடியாக குடமுழுக்கு விழா நடத்தித் தர வேண்டும் என்று வட்டாட்சியரிடம் கோரிக்கையை வைத்தனர் . தமிழக அரசும் எங்களுக்கு உடனடியாக இந்த மனுக்களை வாங்கி பரிசீலனை செய்து கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தித் தர வேண்டும் என்று கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu