மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்..!
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி.
மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் பொதுமக்களுக்கு உள்ள குறைகளை நிவர்த்திக்கும் வகையில் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது.
மதுரை:
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில், குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, எதிர்வரும் 01.10.2024 (செவ்வாய்க்கிழமை) ஆனையூர் பேருந்து நிலையம் அருகில் மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் , மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில், ஆணையாளர், துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மண்டலம் 1 (கிழக்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.3 ஆனையூர், வார்டு எண்.4 பார்க்டவுண், வார்டு எண்.5 நாகனாகுளம், வார்டு எண்.6 அய்யர் பங்களா, வார்டு எண்.7 திருப்பாலை, வார்டு எண்.8 கண்ணனேந்தல், வார்டு எண்.9 உத்தங்குடி, வார்டு எண்.10 கற்பக நகர், வார்டு எண்.11 பரசுராம்பட்டி, வார்டு எண்.12 லூார்து நகர், வார்டு எண்.13 ஆத்திக்குளம், வார்டு எண்.14 கோ.புதூர், வார்டு எண்.16 வள்ளுவர் காலனி, வார்டு எண்.17 எஸ்.ஆலங்குளம், வார்டு எண்.18 அலமேலு நகர், வார்டு எண்.19 கூடல்நகர், வார்டு எண்.36 மேலமடை, வார்டு எண்.37 பாண்டிகோவில், வார்டு எண்.38 சௌராஷ்ட்ராபுரம், வார்டு எண்.39 தாசில்தார் நகர், வார்டு எண்.40 வண்டியூர் ஆகிய வார்டுகள்)
இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu