ஒமைக்ரானை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: மருத்துவக் கல்லூரி முதல்வர்
மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் நித்ய அன்னபூரணி திட்டத்தின் கீழ் உணவு வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
ஒமைக்ரான் வைரஸ் வேகம் அதிகரித்து வருகிறது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார் மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல்.
மதுரையில், புத்தாண்டை முன்னிட்டு மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் நித்ய அன்னபூரணி திட்டத்தின் கீழ் உணவு வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு தொடங்கி தொடர்ச்சியாக 240 நாட்களாக மதுரையில் ரோட்டோரத்தில் வசித்து வரும் வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, போர்வை வழங்கப்பட்டு வருகிறது . புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்றது.
மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, தொழிலதிபர் எம் .சி .என் மாணிக்கம் தலைமை வகித்தார். ஐசிஐசிஐ வங்கியின் ரீஜினல் அசஸ்ட் மேனேஜர் செல்வ ஆறுமுகம் மற்றும் ராஜபாளையம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில், தேனி பிச்சைமணி பிள்ளை இளஞ்சியம் அவர்கள் நினைவாக நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு மதிய உணவினை வழங்கி, மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் பேசியதாவது: தற்போது, அனைவரும் இரு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒன்று மதுரையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். எல்லோரும் கட்டாயம் முகக் கவசம் அணி வேண்டும்.
கடந்த சில வாரங்களாக ஒமைக்ரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனுடைய வேகம் அதிகரித்து இருக்கிறது. அதனால் நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.ஒமைக்ரான் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். அதற்கான உடல் வலிமை, மன வலிமையை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு மூலம் மதுரையில் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இந்த அமைப்பின் பணிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசினார். ஏற்பாட்டினை, மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu