அவனியாபுரம் பெட்ரோல் பங்கில் பைக்கில் வந்த நபர்கள் பணம் பறித்தி தப்பியோட்டம்

அவனியாபுரம் பெட்ரோல் பங்கில் பைக்கில் வந்த நபர்கள் பணம் பறித்தி தப்பியோட்டம்
X

மதுரை அவனியாபுரம் பெட்ரோல் பங்கில் பணத்தைபறித்துக்கொண்டு தப்பிச்செல்லும் மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி

Unknown People came a bike to Avanyapuram petrol station snatched the money

அவனியாபுரம் தனியார் பெட்ரோல் பங்கில் டிரைவர் வைத்திருந்த பணத்தை பைக்கில் வந்த 4 பேர் வழிப்பறி செய்து தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் புறவழி சாலையில் தனியார் பெட்ரோல் பங்கு உள்ளது.நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, ராம்பூர் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் மகன் குருநாதன் ( 49) என்பவர் டிரைவராக பணிபுரிகிறார்.

இவர் லாரிக்கு டீசல் போட பணம் எடுத்து வந்த போது, பைக்கில் பின்னால் வந்த 4 பேர், குருநாதன் கையிலிருந்த ரூபாய் 4650 பணத்தை பறித்து சென்றனர். குருநாதன் கூச்சல் போடுவதற்குள் பைக்கில வேகமாய் தப்பி ஓடினர். வழிப்பறி செய்த 4 பேரும் கர்சீப்பால் முகத்தை மூடி சென்றுள்ளனர். இது குறித்து, அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!