மதுரை அருகேயுள்ள கிராம சாலை மழை நீரால் மூழ்கியதால் மக்கள் அவதி
மழை நீரால் மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை மூழ்கியதால் பேருந்து வராததால் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று சிரமப்படும் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள்:
இதனால், திருப்பரங்குன்றத்திலிருந்து மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்ல தென்பழஞ்சி கிராம சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த சாலையானது, தென்பழஞ்சி கண்மாயை ஒட்டியுள்ளதால், இந்த சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், இந்த சாலையில் இருபுறமும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்ய பட்டுள்ளது.
மாவிலிபட்டி கிராம மக்கள் இந்த சாலை வழியாகத்தான் மதுரைக்கு செல்ல திருப்பரங்குன்றம், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, சிம்மக்கல், பழம்மார்க்கெட், காய்கறி சந்தை, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைய முடியும். மேலும், இங்குள்ள 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இவர்கள், அரசுப் பேருந்து மூலம் பள்ளி சென்று திரும்பும் நிலையில், தென்பழஞ்சி வழியாக மாவிலிபட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் தண்ணீர் மூழ்கியுள்ளதால், அரசுப்பேருந்து தற்போது, மாவிலிபட்டிக்கு முன்பு உள்ள தென்பழஞ்சி வரை மட்டுமே இயக்கப்படுவதால், இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் காலை, மாலை இரு வேளையும் மாவிலிபட்டி கிராமத்திலிருந்து தென்பழஞ்சி வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீரில் நடந்தே பள்ளிக்குச் சென்று திரும்புகின்றனர்.
இப்பகுதி மக்கள் வியாபாரிகள் விவசாயிகள் மருத்துமனைக்கு செல்லும் நபர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் மாவிலிபட்டி கிராமத்திற்கு பாதுகாப்பான முறையில் கடந்து செல்ல மாற்று ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். மாற்றுப் பாதையில் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu