மதுரையில் ரேஷன் அரிசியை வேனில் கடத்தியவர்கள் கைது
அவனியாபுரம் பகுதியில் 1,750 கிலோ ரேஷன் அரிசி வாகனத்தில் கடத்திய மூவர் கைது:
மதுரை அருகே அவனியாபுரம் பகுதியில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக மதுரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அவனியாபுரம் பெரியார் சிலை அருகே ஆய்வாளர் செந்தில்குமார் உதவி ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை யிட்டதில் 50 கிலோ எடையுள்ள 35 சாக்கு மூட்டைகளில் 1750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து ,போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பத்தை சேர்ந்த ஸ்டாலின், வல்லானந்தபுரம் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர் கற்பகராஜ், பராசக்தி நகர் பகுதியில் சேர்ந்த டிரைவர் பூவலிங்கம் ஆகிய மூன்று பேர் என்பது தெரிய வந்தது .எனவே,அவர்களை கைது செய்து வாகனம் மற்றும் கடத்தல் அரிசியை பறிமுதல் செய்தனர்.மதுரை குடிமைப் பொருள் போலீஸார், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஆர்வம் காட்டுவதோடு, சர்க்கரை மற்றும் பாமாயில் கடத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu