காழ்ப்புணர்ச்சி அரசியலை மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்: ஜி.கே. வாசன்
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன்(பைல் படம்)
காழ்ப்புணர்ச்சி அரசியலை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலில் தவறாக செயல்பட்டவர்களுக்கு சரியான பதிலடி வாக்காளர்கள் கொடுப்பார்கள் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.
மதுரை, திருமங்கலத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்தை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: பழங்குடியின மக்களுக்கு பழங்குடியின பட்டியலில் வெளியிட்டதற்கு தமிழக அரசை தமாகா வரவேற்கிறது.
பழங்குடியினருக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழ் இட ஒதுக்கீடு, வீடு கட்ட இடம் அனைத்தையுமே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அவர்களுக்கு விரைவில் வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் விற்பனை என அனைத்து சமூக விரோதச் செயல்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை, முதலில் இருந்தே தமிழ் மாநில காங்கிரஸ் கண்டித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இதை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதிமுகவிடம் உள்ள உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்க கூடிய நிலையில் , வரும் தேர்தல் பாதிப்பு இருக்குமா குறித்த கேள்விக்கு, பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலான மாவட்டங்களில் வலுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியும் வலுவாக செயல்பட தொடங்கி இருக்கிறது. இந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் நலன் காக்க வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் விரும்புகிறது.
வட மாநிலத்தவர்கள் சர்ச்சை மீது நடவடிக்கை திமுக அரசு எவ்வாறு எடுத்து இருக்கிறது என்று குறித்த கேள்விக்கு, தமாகா வட மாநிலத்தினரை பாதுகாக்கும். தமிழகத்தில் வட மாநிலத் தேர்தலின் பங்கு மிகவும் அதிகமாக இருக்கிறது அதில், மாற்றுக்கருத்தே கிடையாது. வட மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வட மாநில தொழில திபர்கள் இங்கு வந்து பணியாற்றிக் கொண்டு நமக்கு வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கும் போது வட மாநிலத்த வர்கள் இங்கு வந்து வேலை பார்ப்பது எந்த தப்பும் கிடையாது.
மும்பை மற்றும் டெல்லியிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் கர்நாடகத்தை சேர்ந்தவர்களும் வேலை பார்க்கிறார்கள். எனவே, நாம் எல்லோரும் இந்தியன் என்ற ஒற்றுமை உணர்வோடு இருந்தால் அந்தந்த மாநில அரசுக்கு நல்லது அதையே தமாகா வலியுறுத்துகிறது. போன ஆட்சியில் திமுக அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் இந்த ஆட்சியில் திமுக அமைச்சர்கள் மீது இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள குறித்த கேள்விக்கு காழ்ப்புணர்ச்சி அரசியலை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சரியான தருணத்தை சரியான நேரத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். தேர்தலில் தவறாக செயல்பட்டவர்களுக்கு சரியான பதிலடி வாக்காளர்கள் கொடுப்பார்கள் என ஜி.கே. வாசன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu