மதுரை அருகே நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது
பைல் படம்
பரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் களவுமாக போலீஸார் பிடித்து கைது செய்தனர்:
மதுரை வலையங்குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஆனந்த், ரூபன் ராஜ், மாரி ராஜா ஆகியோர் அரிவாள் மற்றும் உருட்டு கம்புகளுடன் தயார் நிலையில், பரப்புபட்டி நெடுஞ்சாலை பகுதியில் முட்புதரில் மறைந்து இருந்தனர். அப்பொழுது, ப்பகுதியில் ரோந்து சென்ற பெருங்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் நான்கு வாலிபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சாலையில் செல்லும் நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது.
அவர்களிடம் அரிவாள் மற்றும் உருட்டு கம்புகள் இருந்துள்ளது, உடனடியாக, போலீசார் நான்கு வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து, வேல்முருகன், ஆனந்த், ரூபன் ராஜ், மாரி ராஜா ஆகிய நான்கு நபர்களை மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். பெருங்குடி காவல் நிலைய போலீசார் முன்கூட்டியே வழிப்பறி கொள்ளையர்களை பிடித்ததற்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu