மதுரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
X

மதுரை அருகே குடிநீர் வேண்டி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருநகர் ஓனேக்கால் பகுதியில் குடிநீர் கேட்டு 50 பெண்கள் உட்பட 70 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் ,திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் ஓனேகால் பகுதியில், கடந்த ஒரு வருடங்களாக குடிநீர் வழங்கப்படாத கண்டித்து, பொதுமக்கள் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறை புகார் அளித்தனர்.

எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, இன்று மங்கம்மாள் சாலை மகாலட்சுமி காலனி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 7 பேர் சாலை மறியல் பங்கேற்றனர் .

இதனைத்தொடர்ந்து தகவல் இருந்து வந்த திருநகர் காவல் சார்பாய்வாளர் குமாரி, 94வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்தியன் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் மது சூதனன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில், குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதாகவும், பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக போர்வெல் பகுதியில் சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்வதாகவும் அளித்த உறுதியின் பேரில் இதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!