மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேகம்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேகம்
X

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடந்த பட்டாபிஷேகம்

.கார்த்திகை தீபம் மலையில் ஏற்றப்படுவதால், மலை மற்றும் கோயில் சுற்றுவட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகையொட்டி இன்று மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபதிருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.இதனையொட்டி, உற்சவர் சந்நிதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு சுப்பிரமணியசுவாமிக்கு சிரசில் கீரிடமும், திருக்கரத்தில் சேவல் கொடியும் சார்த்துப்படி செய்யப்பட்டது.மேலும், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்கி அரோகரா முழக்கத்துடன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.கார்த்திகை தீபம் மலையில் ஏற்றப்படுவதால், மலை மற்றும் கோயில் சுற்றுவட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!