விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி

விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி
X

பைல் படம்

இதனை அடுத்து, அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள் கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் .

சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட நேரிட்டது.

சென்னையில் இருந்து பகல் 11:30 மணியளவில் மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், மதுரை இருந்து செல்ல வேண்டிய பயணிகள் அவதி அடைந்தனர்.

மதுரையில் இருந்து சென்னை செல்ல 90 பேர் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். சென்னையி லிருந்து 11:30 மணிக்கு மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து 12.05 மணிக்கு மீண்டும் சென்னை செல்லும்.விமானம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பயணிகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள் கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் .

மிகவும் அவசரமாக செல்லும் பயணிகளுக்கு இண்டிகோ விமானத்தில் சென்னை பயணம் செய்யவும், மீதமுள்ள 37 பயணிகளுக்கு சென்னை செல்வதற்காக அடுத்த விமானத்தில் இருக்கைகளைத் தயார் செய்து வருகின்றனர்.ஸ்பைஸ் ஜெட் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இதனால், விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
நோயாளியைப்  பாக்கப்  போறிங்களா..? கட்டாயம் இதெல்லாம்  தெரிஞ்சிட்டு போங்க...!