கூட்டணி குறித்து நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும்: ஹெச்.ராஜா தகவல்

மாநிலங்களில் கூட்டணி குறித்து நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கூட்டணி குறித்து நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும்: ஹெச்.ராஜா தகவல்
X

ஹெச். ராஜா, பாஜக.

மாநிலங்களில் கூட்டணி குறித்து நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய குழு உறுப்பினர் ஹெச். ராஜா டெல்லி செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி குறித்து அண்ணாமலை கூறிய கருத்திற்கு, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகையால் மீசை முளைக்கட்டும். அதுவரை அத்தை அத்தை தான் என ஹெச்.ராஜா கூறினார்.

பாஜகவில் கூட்டணி குறித்து எந்த முடிவுகளும் மாநில தலைவரோ மற்ற நிர்வாகிகளும் அறிவிக்க முடியாது. ஆலோசனைகள், வழிமுறைகள், கருத்துக்களை பதிவு செய்யலாம். ஆனால், கூட்டணி குறித்து முடிவு எடுப்பது பாஜகவின் பாராளுமன்ற குழு மட்டுமே.

கடந்த இரு நாட்களுக்கு முன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியது குறித்து செய்தி வந்துள்ளது . அது உண்மை அல்ல. பாஜக அதிமுக கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது, மாநில தலைவரோ மற்ற நிர்வாகிகளோ கிடையாது. கூட்டணி குறித்து, வழிமுறைகள் மட்டுமே கருத்துக்களை பதிவு செய்ய முடியும்.

இது, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்திலும் அதற்கு முன்னர் சுந்தர் பண்டரி காலத்திலும் இருந்து நடைமுறையில் வந்துள்ளது.

ஆகவே, மாநில கூட்டத்தில் கூறப்படும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு ,மத்திய குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யப்படும் என, ஹெச்.ராஜா கூறினார்.

திருச்சியில் கே.என்.நேரு, சிவா எம்பி இடையே ஏற்பட்டது, தற்காலிக சமரசம் என வெளிப்படையாகவே தெரிகிறது. மேலும், கத்தி ,கம்பு போன்றவற்றை கொண்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவா அவர்களின் வீடுகளில் தாக்கியுள்ளனர். அத்துடன் காவல் நிலையத்தை தாக்கியுள்ளனர். ஆனால், இதுவரை யாருமே கைது செய்யப்படவில்லை. அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பது உண்மை. மேலும், இது தற்காலிகமான சமரசமாகவே தெரிகிறது . உடைந்த பானை ஒட்டாது என்பது போல் உள்ளது என்றார்.

அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனக் கூறிய கேள்விக்கு, நான், சமீபத்தில் கோவை சென்று இருந்தேன் அங்கு எனது 40 ஆண்டு கால நண்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தில்லி செல்லும் முன், கோவையில் செ.மா. வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமனை சந்தித்தேன். அவர்களுக்கு, எந்த விதமான கருத்துகளும் இல்லை. ஒரு சில தலைவர்கள் பதில் கூறியிருக்கலாம். அதற்கு பதில் கூற முடியாது என ஹெச். ராஜா கூறினார்.

Updated On: 19 March 2023 10:12 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...