பனையூர் வாலகுருநாத சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா

பனையூர் வாலகுருநாத சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா
X

அருள்மிகு வாலகுருநாத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் திரண்டிருந்த பக்தர்கள். 

மதுரை பனையூர் கிராமம் அருள்மிகு வாலகுருநாத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை பனையூர் கிராமம் அருள்மிகு வாலகுருநாத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் சுவாமி, அம்பாள் பரிவாரதேவதை விமானங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக, யாகபூஜைகள், மகா பூர்ணாகுதி பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவை காண சுற்றுவட்டார கிராமமக்கள் ஆயிரகணக்கானோர் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அருஞ்சுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!