மதுரையில் தானம் செய்யப்பட்ட இறந்தவரின் உறுப்புகள்

மதுரையில் தானம் செய்யப்பட்ட  இறந்தவரின் உறுப்புகள்
X

பைல் படம்

மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது

மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் சத்திரப்பட்டி அருகே அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஜெயராமன் 40. இவர் சம்பவத்தன்று அரசு பஸ்ஸில் பயணம் செய்தபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.அங்கு தலைக்காயப்பிரிவு வார்டில் உள்நோயாளியாக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரது உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். இறந்தவர் ஜெயராமனின் மனைவி முத்துலட்சுமியிடம் ஒப்புதல் பெறப்பட்டது .பின்னர் அவரது உறுப்புகளான கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்களின் இரு கருவிழிகள் தானமாக வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜெயராமனின் உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது.பின்னர் உரிய மரியாதையுடன் அவர் குடும்பத்தாரிடம் ஜெயராமனின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 16- பேரை போலீஸார் கைது செய்தனர்

விராட்டிபத்தில் வேல் கம்பால் குத்தி தம்பி கொலை: அண்ணன் கைது

மதுரை விராட்டிபத்து முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் 60 .இவரது இரண்டு மகன்கள் பாலமுருகன்(29) திரவியம்(36 ),இவர்களில் திரவியத்திற்கு குடிப்பழக்கம் இருந்தது .சம்பவத்தன்று குடிபோதையில் தெருவில் திரவியம் ரகளையில் ஈடுபட்டிருந்தார்.இதை தம்பி பாலமுருகன் மற்றும் சிலரும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திரவியம் தம்பி பாலமுருகனிடம் தகராறு ஈடுபட்டார்.அப்போது தகராறுமுற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் வேல் கம்பை எடுத்த அண்ணன் திரவியம் தம்பி பாலமுருகனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பாலமுருகனை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாய் மாரியம்மாள் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பியௌ கொலை செய்த அண்ணன் திரவியத்தை கைது செய்தனர்.

ஜவுளிக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்: இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது .

மதுரை வெங்கல கடை தெருவை சேர்ந்தவர் வாசுதேவன்58. இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய தம்பி மாதவன். இவர்களுக்குள் சொத்து பரிசினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாதவன் அவருடைய மனைவி காஞ்சனா உறவினர் சாரதா ஆகியோர் வாசுதேவனை ஆபாசமாக பேசி தாக்கினர். இந்த சம்பவம் குறித்து வாசுதேவன் கொடுத்த புகாரில் விளக்கத்தூண் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் வாசுதேவனை தாக்கிய மாதவன், மனைவி காஞ்சனா, உறவினர் சாரதா மூவரையும் கைது செய்தனர் .

இந்த சம்பவம் குறித்து காஞ்சனா புகார் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாசுதேவன் மற்றும் ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பிலும் போலீசார் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஆறு பேர் கைது

மதுரை அண்ணாநகர் சப் இன்ஸ்பெக்டர் சத்யகுமார் .இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் அருகே சென்றபோது அங்கு இரண்டு வாலிபர்கள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர். அவர்களை அவர் பிடித்தார். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் வண்டியூர் காளியம்மன் கோவில் தெரு சேதுராமன் மகன் சூர்யா பிரகாஷ் என்ற கால் கட்டை (24) அண்ணா நகர் முந்திரிதோப்பு முத்துப்பாண்டி மகன் மணிகண்டன் என்ற உசிலைமணி(34 )என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து வாள் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

அண்ணா நகர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் .இவர் எஸ் எம் பி காலனி பின்புறம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்தார். பிடிவட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கரும்பாலை கீழத்தெரு முருகன் மகன் வெள்ளைச்சாமி என்ற ஒயிட்(32) அண்ணா நகர் எஸ் எம் பி காலனி சக்திவேல் மகன் ஜோதி குமார் என்ற எழும்பன்(23 )என்று தெரியவந்தது. அவர்கள் இருவரையும் அவர் கைது செய்தார்.

கே புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சியோன் ராஜா .இவர் அழகர் கோவில் மெயின் ரோடு பாலாஜி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஊமச்சிகுளம் எருக்கநத்தம் செல்வ மகன் சூர்யா என்ற சூர்யா(25), பாலமேடு வெள்ளையம்பட்டி முருகன் மகன் அஜித் என்ற கருவாயன்(22 ) இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தார்.மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் மொத்தம் ஆறு பேரை போலீசார் ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.

மதுரையில் இரண்டு பெண்களிடம் பத்து பவுன் செயின் பறிப்பு

மதுரை, கருப்பாயூரணி மீனாட்சி நகர் மனோகரன் மனைவி சசிரேகா(46.) கோமதிபுரம் மேலமடையில் ஒரு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பைக் ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சசிரேகா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

விளாங்குடியில் செயின் பறிப்பு

கோரிப்பாளையம் சம்புரோபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் லெனின் மனைவி ரேகா 37.இவர் கணவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.ஸ அவர்கள் சென்ற பைக் விளாங்குடி கொன்டை மாரியம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தது. அவரை பின் தொடர்ந்து சென்ற இரண்டு பைக் ஆசாமிகள், ரேகா அணிந்திருந்த மூன்று பவுன் செயினை பைக்கில் இருந்தபடியே பறித்து சென்று விட்டனர் .இந்த செயின் பறிப்பு குறித்து ரேகா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின்பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

ஆரப்பாளையத்தில் கஞ்சாவுடன் பெண் உட்பட இரண்டு பேர் கைது

மதுரை, ஆரப்பாளையம் ஏ.ஏ. ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் தண்டீஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தார். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்தார்.அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கரிமேடு அந்தோணியார் கோவில் தெரு முருகன் மனைவி கார்த்திகா(33 ),கரிமேடு ராஜேந்திரா மூன்றாவது தெரு முத்துசாமி மகன் செந்தில்குமார்(38 ) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்தார் .அவர்கள் வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்தார். பைக்கில் சோதனை செய்தபோது பைக்கில் 250 கிராம் கஞ்சா இருந்தது.விற்பனை செய்த பணம் ரூபாய் 95,000 மும் இருந்தது. அவற்றையும், அவர்கள் வைத்திருந்த செல்போன் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags

Next Story