பேரணையிலிருந்து திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு

Water Flow | Madurai News Tamil
X

திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

Water Flow - பேரணையிலிருந்து திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Water Flow -திருமங்கலம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசன பெறும் பகுதிகளுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில், தலைமைப் பொறியாளர் ஞான சேகரன், செயற்பொறியாளர், அன்பு செல்வன், துணை செயற்பொறியாளர் அன்பு தலைமையில், வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன கோட்ட தலைவர்கள் எம்.பி.ராமன் , தங்கராஜ், பகவான்,தியாக ராஜன்,பாண்டியன் மற்றும் விவசாய பிரதிநிதிகள் முன்னிலையில் உதவி பொறியாளர்கள் செல்லையா கோவிந்த ராஜன் பிரபாகரன் தளபதி ராம்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

*விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உரிய காலத்தில் தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொண்ட பாசன கால்வாய் சங்கத் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு, பெரியாறு வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் விவசாய சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள்தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!