மதுரை அருகே திறந்த வெளி நெல் சேமிப்பு கிட்டங்கி: அரசு செயலர் ஆய்வு

மதுரை அருகே திறந்த வெளி நெல் சேமிப்பு கிட்டங்கி: அரசு செயலர் ஆய்வு

மதுரை அருகே கப்பலூரில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு வளாகத்தில் அரசு செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆட்சியர் அனிஸ்சேகர்

Secretary to the Government of India- மதுரை அருகே திறந்தவெளி நெல் சேமிப்பு வளாகத்தில் அரசு செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்

Secretary to the Government of India- மதுரை மாவட்டம், கப்பலூர் பகுதியில் திறந்தவெளி நெல் சேமிப்பு வளாகத்தில் மேற்கூரை அமைப்புடன் கூடிய கொட்டகை அமைக்கும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் முன்னிலையில் கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைஅரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கப்பலூர் பகுதியில் கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், முன்னிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திறந்தவெளி நெல் சேமிப்பு வளாகத்தில் மேற்கூரை அமைப்புடன் கூடிய கொட்டகை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கூட்டுறவு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:

கடந்த ஆண்டு வரை திறந்தவெளியில் தார்பாய்கள் மூடப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் பரவலாக காணப்பட்டது. இவ்வாறு திறந்தவெளியில் சேமிக்கப்படும் நெல்மணிகள் மழை நேரத்தில் பாதிக்கப்படுவதாக செய்திகள் வந்தன. இதனை அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர், திறந்த வெளியில் தார்பாய்களைக் கொண்டு நெல் சேமிக்கும் நடைமுறையை முற்றிலும் தவிர்த்திட வேண்டுமென உத்தரவிட்டார்கள். தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்ற 18 மாதங்களில் முதற்கட்டமாக ரூபாய் 238 கோடி மதிப்பீட்டில் 213 இடங்களில் மொத்தம் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கிகளை நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் அமைப்பதற்கு ஆணை வெளியிட்டார்கள்.

அதன்படி,18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 கப்பலூர் சேமிப்பு கிட்டங்குகள் அமைக்கும் பணிகளில் 3 சேமிப்பு கிட்டங்குகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. மேலும், 2 சேமிப்பு கிட்டங்கிகள் வருகின்ற 1 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் உள்ள 213 இடங்களில் 106 பகுதிகளில் மொத்தம் 105 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிவு பெற்று தயார் நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு குறுவை சாகுபடி விவசாயத்தில் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளோம். சம்பா பயிர் சாகுபடியில் இதுவரைக்கும் 10.2 இலட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே,சம்பா பயிர் சாகுபடியானது, வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் 134 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தது. இவற்றின் மூலம் 1 இலட்சத்து 38 ஆயிரம் வரை நெல்கொள்முதல் செய்யப்பட்டது.

நியாய விலைக்கடை குடும்ப அட்டைகளை பொறுத்தவரை 3 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், 1 கோடியே 14 இலட்சம் குடும்ப அட்டைகள் முன்னுரிமையாக அந்தியோதயா திட்டத்தை உள்ளடக்கிய அட்டைகளும்,1.04 இலட்சம் முன்னுரிமையற்ற அரிசி குடும்ப அட்டைகளும், 3.82 இலட்சம் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைகளும் எதையும் வாங்காத 61 ஆயிரம் கௌரவ குடும்ப அட்டைகளும் சேர்த்து மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் புழகத்தில் உள்ளன. இதில், முன்னுரிமை அட்டைகளில் மாற்றுத்திறனாளிகள் 6.6 இலட்சம் நபர்கள் சேரக்கப்பட்டுள்ளனர். புதிதாக குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பித்த 2 வாரத்திலிருந்து 1 மாத காலத்திற்குள் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது, விண்ணபதாரர்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விற்பனையாளர்கள் பணியிடங்களை விரைவில் நிரப்பப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக மே 2021 முதல் தற்போதை வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தெரிவித்தார்.

தொடர்ந்து,கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் வட்டம், தோப்பூர் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக உள்ள உணவுப்பொருள் சேமிப்பு கிட்டங்கி, மதுரை மேற்கு ஒன்றியம், ஆலாத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும் மற்றும் மதுரை கூடல் நகர் பகுதியில் இரயில்வே தலைப்பில் பொது விநியோக திட்ட நகர்வு பணியினையும், மதுரை இரயில் தலைப்பிற்கு நேற்று மூலம் 58 பெட்டியில் வரப்பெற்ற 7200 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசியையும், மதுரை வடக்கு வட்டம் ஆலாத்தூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையினையும் ,

மதுரை தெற்கு வட்டம் சாமநத்தம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஆலை முகவரான மெசர்ஸ்.முத்துப்பாண்டீஸ்வரி நவீன அரிசி ஆலையையும் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வுகளின் போது, இணைப்பதிவாளர்கள் குருமூர்த்தி (கூட்டுறவு சங்கங்கள்), பிரியதர்ஷினி (பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை) மாவட்ட வழங்கல் அலுவலர்எம்.முருக செல்வி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story