சிறுவாலை ஊராட்சியில், நாட்டு நலப்பணித் திட்ட முகாம்..!
மதுரை அருகே ,சிறுவாலை ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்.
அலங்காநல்லூர்:
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், சிறுவாலை ஊராட்சியில், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட தூய்மை பணிகள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு, ஊராசி மன்றத் தலைவர் பாண்டியம்மாள் ராஜு தலைமை தாங்கினார்.
அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அரியூர் பாலமுருகன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில், கல்லூரி மாணவர்கள் அரசு பள்ளி, கோவில்கள், பொது இடங்கள், நீர் நிலைகள் தூர்வாருதல், சுற்றுப்புறசூழல் பாதுகாத்தல், ஹெல்மெட் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமில், முன்னாள் கூட்டுறவு தலைவர் மலர் கண்ணன், கிளைச் செயலாளர் ராகுல், குருசாமி, சிறுவாலை செல்வம் மற்றும் கல்லூரி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 7 நாட்கள் இந்த ஊராட்சியில் தூய்மை பணிகள் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் சிறுவாளை ஊராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu