கோயில்களில் நவ. 27-ல் காலபைரவர் அஷ்டமி சிறப்பு பூஜை

கோயில்களில்  நவ. 27-ல் காலபைரவர் அஷ்டமி சிறப்பு பூஜை
X

பைல் படம்

நவ. 27-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கால பைரவர் அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது

கோயில்களில், நவ. 27-ல் கால பைராவாஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழக கோயில்களில், நவ. 27-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கால பைரவாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சிவ ஆலயங்களில், கால பைரவர் வழிபாட்டு முறைகளில் சிறந்த பங்கை வகிக்கிறது.அதாவது, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று, பக்தர்கள் காலை பைரவர், சொர்ண ஆகாஷ பைரவருக்கு, சிறப்பு அபிஷேகங்களை செய்தும், வடைமாலை அணிவித்து கால பைரவருக்கு தயிர்சாதம் நெய்வேத்தியமாக படைத்து வழிபடுவர்.

மேலும், தேங்காய், வெள்ள பூசனிக்காய், மிளகு தீபம் ஏற்றியும், பிரார்த்தணைகளை நிறைவேற்றி வருகின்றனர். மாதந்தோறும் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையாகவும், கார்த்திகை மாதம் வருகின்ற தேய்பிறை அஷ்டமியை, காலபைரவ அஷ்டமி, மகாதேவ அஷ்டமி என, பக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நவ. 27-ம் தேதி சனிக்கிழமை மாலை கால பைரவ அஷ்டமியன்று, மாலை 6 மணிக்கு, மதுரை சாத்தமங்கலம், ஆவின் பாலவிநாயகர், மதுரை மேலமடை தாசில்தார் சௌபாக்யா விநாயகர், வரசித்தி விநாயகர், அண்ணாநகர் சர்வேஸ்வரர், கோமதிபுரம் ஆவின் பால விநாயகர், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாதர் சிவன் ஆலயம், திருவேடகம் ஏடகநாதர், மதுரை தெப்பக்குளம் மூக்தீஸ்வரர், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்களில், காலபைரவ அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சணைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!