திமுகவில் தன்மானம்-சுயமரியாதை இல்லை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

திமுகவில் தன்மானம்-சுயமரியாதை  இல்லை:  முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
X

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம்விஸ்வநாதன் எம்எல்ஏ

எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் கூறியதை தற்போது அவர்கள் ஆட்சியில் நிறைவேற்ற வேண்டும்

சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயமரியாதை இழந்த கட்சி திமுக என்றார் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

சென்னை செல்வதற்காக, திண்டுக்கல் மாவட்டம்ஸ நத்தத்திலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

அப்போது அவர் கூறியது: திமுக ஆட்சியில் ஆவின் பால் விலை உயர்வு மட்டும் அல்ல, எல்லாமே விலை உயர்வு தான். வாழ்விலேயே கூட்டியது மட்டுமல்லாமல் ஆவினை வெண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி உள்ளனர்.திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் வரியை குறைப்போம் வசதியை பெருக்குவோம் என்று வசனம் பேசிவிட்டு இன்றைக்கு வரியை குறைக்க வேண்டாம் ஆனால், உயர்த்தாமல் இருந்திருக்கலாம்.

அதிமுக மின்சாரத்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றியது அம்மாவின் ஆட்சியில் தான், எதிர் கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்றைக்கு மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால், மின் கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது என்று ஏக வசனம் பேசியவர். இன்றைக்கு மின்சார கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளார். ஆண்டுதோறும் மின்சார கட்டணம் ஆறு சதவீதம் உயர்த்தப்படும் என்று அரசாணையும் வெளியிட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு திமுக அரசே முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த கேள்விக்கு: அதிமுக அரசு பொங்கல் பரிசாக கொரோனா காலத்தில் ரூபாய் 2500 கொடுத்ததற்கு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ரூபாய் 5000 கொடுக்க வேண்டும்என வலியுறுத்தினார். ஆனால் ,தற்போதைய முதல்வராக இருக்கக்கூடிய ஸ்டாலின் 5000 கொடுக்க வேண்டாம் அதிமுக கொடுத்த 2500 கூட கொடுக்கலாம்.

ஆனால், அதையும் செய்யாமல் ஒரு சல்லி பைசா கூட கொடுக்காமல் பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கி வருகினார். அது இன்று வரை மக்களின் ஏளனத்திற்கும், பரிகாசத்திற்கும் ஆளானது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் கூறியதை தற்போது அவர்கள் ஆட்சியில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் .

வாரிசு அரசியல் என திமுகவை எவ்வளவு விமர்சனம் செய்தாலும் இன்பநிதிக்கு கூட கொடிபிடிப்போம் என கே.என்.நேரு கூறியது குறித்து கேள்விக்கு: தன்மானம் இல்லாத கட்சி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயமரியாதை இழந்த கட்சி திமுக. சாதாரண சிறுவன் உதயநிதி மகனுக்கும் கொடி பிடிப்போம் என சொல்லுகிற அளவிற்கு தன்மானம் அற்ற சுயமரியாதையை இழந்த இயக்கமாக இன்றைக்கு திமுக மாறிவிட்டது. ஆனால் ,அவர்கள் சுயமரியாதையின் சுடரொளிகள் என தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். மக்கள் இதை பார்த்து சிரிக்கிறார்கள் என்றார் நத்தம் விஸ்வநாதன்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!