/* */

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை கிடையாது: டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம்

பணி நிரந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற ஜனவரி 26 முதல் மாநில மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கிறோம்.

HIGHLIGHTS

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை கிடையாது: டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம்
X

மதுரை திருப்பரங்குன்றத்தில்  நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்கள் சங்க்கூட்டம்

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டோம் என டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மண்டலக் கூட்டத்திஸ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தனியார் மகாலில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க மண்டல கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் முருகன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.

மாநில சிறப்பு தலைவர், சட்ட அலோசகர் பாரதி தலைமை வகித்தார். கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் ஒய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்திடவும் டாஸ்மாக் உள்ளிட்ட அரசுத் துறையில் ஒப்பந்த துறை பணியாளர்களை தவிர்த்து நேரடி நியமனம் .பள்ளி மாணவர்களுக்கு மதுவிற்பனை தடை செய்வது என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்க தலைவர் பாரதி கூறுகையில்:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை நலச் சங்கத்தின் உடைய மதுரை மண்டல நிர்வாகிகளுடைய கூட்டம் இன்று நடந்தது.

தமிழக அரசு, ராஜஸ்தான், ஒரிசா, பஞ்சாப் போன்று தமிழ்நாட்டிலே ஒப்பந்த தொழிலாளர்மயத்தை ஒழித்து கட்டி பத்தொன்பது ஆண்டுகளாக தமிழகத்தினுடைய நிதிச் சுமையை தாங்கி பிடித்து ஆண்டுக்கு 36,000 கோடி நிதி வருவாய் அள்ளித்தரும் டாஸ்மாக் விற்பனையாளர்களையும் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தர முன் வரவேண்டும். இந்தக் கோரிக்கை முன்வைத்து வருகின்ற ஜனவரி 26 முதல் மாநில மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கிறோம். அதில் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்திவோம். இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

அப்படி இல்லாவிடில், சிறை நிரப்புப் போராட்டம், கடையடைப்பு போராட்டம் உள்பட அடுத்தடுத்த போராட்டங்களை நடத்துவதற்கும் எங்களுடைய தமிழ்நாடு டாஸ்மாக் நல சங்கம் தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

டாஸ்மாக் ஊழியர்களின் வருமானம் என்பது பிடித்தம் போக பத்தாயிரம் மட்டும் ஊதியம் கிடைக்கிறது . அதிகாரிகள் அத்தனை பேருக்கும் அவர்களுக்கு மாதம்தோறும் மாமுல், கடை வாடகை, அட்டைப்பெட்டி கட்டணம் உட்பட அத்தனை விதமான செலவுகளும் ஊழியர்களுக்கு தவிர்க்க முடியாத விஷயமா இருக்கிறது.

டாஸ்மாக் பணியாளர்கள் அத்தனை பேரையும் பணி நிரந்தம் செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கி அவர்களுக்கு ஓய்வூதிய உட்பட பல்வேறு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமீப காலங்களில் சீருடையில் வரும் பள்ளி மாணவர்களுக்கு மதுவிற்பனை சர்ச்சை குறித்து, பள்ளி மாணவர்களுக்கு மதுபானங்களை விற்பது என்பது தவறான விஷயம் நாங்கள் கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டோம் என சங்கத்தலைவர் பாரதி கூறினார்.

Updated On: 23 Nov 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!