நித்யானந்தா, மதுரை ஆதீனம் அல்ல: பார்வர்டு பிளாக் தலைவர் ஆவேசம்

நித்யானந்தா, மதுரை ஆதீனம் அல்ல: பார்வர்டு பிளாக் தலைவர் ஆவேசம்
X

அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன்

நித்யானந்தா, மதுரை ஆதீனம் என்று கூறினால், கடும் விளைவை சந்திக்க நேரிடும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் ஆவேசம்

நித்தியானந்தா 293வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டார் என்பது ஏற்புடையது அல்ல என்றும் திருமாறன் ஜி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கே சி திருமாறன் அளித்த பேட்டியில் கூறியதாவது: நித்தியானந்தா மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றபோது அது செல்லாது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சி ஆகியோர் இணைந்து போராட்டம் நடத்தி அதன் பின் மதுரையில் இருந்து வெளியேறினார்.

தற்போது மதுரை ஆதீனம் மறைவையொட்டி மீண்டும் நித்யானந்தா 293-வது ஆதீனமாக பொறுப்பேற்க உள்ளதாக கூறியுள்ளார். மதுரை ஆதீனத்தை பொறுத்தவரையில் சைவ சித்தாந்த வழியை கடைபிடிக்கும் வேளாளர்களே பதவியேற்க முடியும். நித்தியானந்தா ஆதீனமாக பொறுப்பேற்க முடியாது .அவர் மீண்டும் மதுரை வந்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் . இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!