மதுரை அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
மதுரை அருகே முதல்வருடன், மக்கள் தொடர்பு முகாம்.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.இதில், 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில், மக்களுடன்முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. பெருங்குடி அமுதம் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்ப்பு முகாமில்,துணை ஆட்சியர்,நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன்,
கள்ளிக்குடி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம், ) நீலாதேவி, திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா , பெருங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பத்ம முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயலட்சுமி ராஜேந்திரன், ஊராட்சி அலுவலர் செந்தில் வேல் முருகன் ஆகியோர் மக்களின் முதல்வர் குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்... பொது மக்கள் எரிசக்தித் துறை / தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாற்றுத் திறனாளிகள்நலத் துறை, சமூகநலத்துறை.
ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை (மாவட்ட தொழிற்மையம்), தொழிலாளர் நலவாரியம், கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் கணினி மூலம் பதிவு செய்து தேவையான ஆவணங்கள் பெறுவதற்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி தொடர்புடைய துறைகளிடமிருந்து பெற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இதனைப் பயன் படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும்,பொது மக்களுக்கு தேவைப்படும் சேவைகளை பெறுவதற்கு அதற்குரிய ஆவணங்களை தவறாமல் முகாமிற்கு எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . பொது மக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம் என்ற அறிவுப்பு மதுரை மாவட்ட ஆட்சியரால் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu