மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சங்கீதா பொறுப்பேற்பு

மதுரை மாவட்டத்தின்  புதிய ஆட்சியராக சங்கீதா பொறுப்பேற்பு
X

மதுரை மாவட்ட புதிய ஆட்சியர் சங்கீதா.

மதுரை மாவட்டமாவட்ட ஆட்சித்தலைவராக மா.சௌ.சங்கீதா பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.05.2023) மாவட்ட ஆட்சித்தலைவராக மா.சௌ.சங்கீதா பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா ஏற்கெனவே வகித்துள்ள பொறுப்புகள் விவரம்:2005-ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராக (பயற்சி) பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியராகவும்,

தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராகவும், சென்னை தலைமை யிடத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகவும் (நில எடுப்பு), சுகாதாரத்துறையில் மாவட்ட வருவாய் அலுவலராகவும் (காப்பீடு), மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் இணை இயக்குநராகவும், டாம்ப்கால் நிறுவனத்தில் பொது மேலாளராகவும், சென்னை மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

தொடர்ந்து, சென்னை தலைமையிடத்தில் கலால் துணை ஆணையராகவும் உயர்க்கல்வித்துறையில் துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் இணை மேலாண்மை இயக்குநராகவும், வணிகவரித் துறையில் இணை ஆணையராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, தற்போது மதுரை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!