நவராத்திரி விழா: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மதுரை மீனாட்சி அம்மன்

நவராத்திரி விழா: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில்  மதுரை மீனாட்சி அம்மன்
X

பைல் படம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்:

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.இந்த விழாவின் ஆறாம் நாளான இன்று அம்மன் அர்த்தநாரீஸ்வர் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கொலு மண்டபத்தில் எழுத்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள கொலுச்சாவடியில் வைக்கப்பட்ட சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் மற்றும் இதர கொலு பொம்மைகள் பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!