வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வகம் திறப்பு
சுகாதாரத் துறை சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆய்வகத்திற்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது
மதுரை மாவட்டம், வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆய்வக கட்டிடம் திறக்கப்பட்டது .
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, வலையங்குளம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.இங்கு ஆய்வு வசதிகள் இல்லாததால், பெருமளவில் நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனர்.இதனை அடுத்து, தமிழக அரசு சுகாதாரத் துறை சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆய்வகத்திற்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மதுரை ஆனையூரில் இருந்து காணொலி காட்சி மூலம் புதிய ஆய்வு கட்டிடத்தை திறந்து வைத்தார்.புதிய கட்டிடத்தில், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன்.வலையன் குளம் வட்டார மருத்துவர் தனசேகரன், மருத்துவர் கோமதி, வட்டாரா சுகாதார மேற்பரையாளர் பொறுப்பு அழகுமலை, சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், மணிகண்டன் குத்து விளக்கேற்றினர்.மற்றும் செவிலியர்கள் அனைத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர் .
தமிழகத்தில் 8 ஆயிரத்து 713 துணை சுகாதர நிலையங்கள் உள்ளன. இதில் 1,500 நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. 1,000 கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இடிந்து கிடக்கிறது. 2 ஆயிரத்து 686 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500 நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. ஆனால்,கடந்த 2 ஆண்டுகளில் 500 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu