போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்..!

போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்..!
X

சோழவந்தான் பேரூராட்சி சார்பில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை, சோழவந்தான் பேரூராட்சி சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

சோழவந்தான்.

மதுரை, சோழவந்தான் பேரூராட்சி சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவந்தான் பேரூராட்சி சார்பில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளித் தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார் . நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார்,பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், பேரூராட்சி கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், வள்ளி மயில், தொழிலதிபர் மணி முத்தையா நிஷா, கௌதம ராஜா, செல்வராணி,சிவா, முத்து செல்வி,சதீஷ் உள்ளிட்ட பேரூராட்சி கவுன்சிலர்கள் துப்புரவு ஆய்வாளர் சூர்யா குமார் துணை தாசில்தார் எழிலன் ஆகியோர் போதை பழக்கத்திற்கு எதிரான கருத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் கண்ணம்மா கல்யாண சுந்தரம், பணியாளர்கள் சோனை,அசோக், பூவலிங்கம், பாலமுருகன், பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றபோதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காணொளி காட்சி வாயிலாக திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து,சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்ட போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி