மருத்துவத்துறையில் சேவை மனப்பான்மை யோடு பணியாற்ற வேண்டும்: மேயர் வலியுறுத்தல்

மருத்துவத்துறையில் சேவை மனப்பான்மை யோடு பணியாற்ற வேண்டும்: மேயர் வலியுறுத்தல்
X

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை நடைபெற்ற  சுகாதாரப்பிரிவு ஊழியர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்று  பேசிய  மேயர் வ.இந்திராணி பொன்வசந்த்

மாநகராட்சியில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர்களுடன்; ஆலோசனைக் கூட்டம் நடந்தது

மருத்துவ துறையில் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும் என்றார் மதுரை மாநகராட்சி மேயர் வ.இந்திராணி பொன்வசந்த்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில், மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், தலைமையில் மாநகராட்சியில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர்களுடன்; ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவற்றில், சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சிறப்பான மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் பங்கேறு மேயர் இந்திராணி பேசியதாவது: மாநகராட்சி மருத்துவமனைகளில் பணிபுரியும் மண்டல மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவத்தில் பணியாற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பணியாளர்களும் பொதுமக்களுக்கு முறையாக சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவுடன் பொறுப்புடன் பணியாற்றுவது குறித்தும், முறையான மருத்துவ பரிசோதனைகளை நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் அளிப்பது.

மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன், இரத்த கொழுப்பு, தொற்றா நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ளுதல், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிக கவனத்துடன் மருத்துவ சேவையை அளிக்க வேண்டும் தொடர்ந்து பிரசவத்திற்கு பின்பு தாய்சேய் இருவரையும் மருத்துவ பரிசோதனை, ஊட்டசத்து மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி மருத்துவமனைகளில் மகப்பேறு விகிதத்தை மேலும் அதிகப்படுவதற்குகேற்ப தங்களின் பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும். மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கூடுதல் பணியாளர்கள், உபகரணங்கள், மருந்துகள், கட்டிட வசதி, தேவைக்கேற்ப விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் .மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறையை சார்ந்த அனைவரும் பொதுநலம் கருதி சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும் என்றார் என்றார் மேயர் இந்திராணி.

இக்கூட்டத்தில் , துணை மேயர் தி.நாகராஜன், சுகாதாரத் குழுத் தலைவர் ஜெயராஜ், நகர்நல அலுவலர்.ராஜா, உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மண்டல மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture