மதுரை அருகே உச்சி கருப்பணசாமி கோயிலில் முக்கனி திருவிழா
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சி கருப்பணசுவாமி திருக்கோவில் நடைபெற்ற முக்கனி திருவிழா
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சி கருப்பணசுவாமி திருக்கோவில் முக்கனி திருவிழா நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே ,திருநகர் பகுதியில் அமைந்துள்ள உச்சி கருப்பணசுவாமி திருக்கோவிலுக்கு முக்கனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு, முக்கனி திருவிழா ஹார்விபட்டி பகுதியில் உள்ள கோவில் பெட்டி இருக்கும் இடத்திலிருந்து சாலை வழியாக திருநகர் பகுதியில் உள்ள உச்சி கருப்பணசுவாமி கோவில் வரை ஆயிரக்கணக்கில் முக்கனிகளை பக்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர், அங்கு சாமி சன்னதியில் உச்சிகருப்பணசுவாமிக்கு, பக்தர்கள் கொண்டுவந்த முக்கனிகளான மா, பலா வாழை பழங்களை சுவாமி முன்பு குவியலாக படைத்தனர். மேலும்., 7 அடி உயர மாலையை சுவாமிக்கு சூடி பத்தி, சூடம் ஏற்றி தீபாரதனை காட்டினர். அங்கு ,ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு பயபக்தியுடன் சாமியை வழிப்பட்டனர். இதனையடுத்து , சாமிக்கு படைக்கப்பட்ட பழங்கள் ஒவ்வொரு ஆண் பக்தருக்கும் டஜன் கணக்கில் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை கோவிலை விட்டு வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற ஐதீகம். இந்த முறையை பின்பற்றுவதால், கோவிலுக்கு வந்திருந்த ஆண் பக்தர்கள் தங்களால் முடிந்த அளவு சாப்பிட்டனர். மேலும்., ஆண் பக்தர்கள் நெற்றியில் பூசிய விபூதியை பெண்கள பார்க்க கூடாது என்பதால், தெய்வீக நெறியை் பக்தர்கள் பின்பற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu