ராஜபக்சவுக்கு, குனிந்து கொடுக்கும் மோடி அரசு: காங்கிரஸ் எம்.பி. கருத்து
விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர்
ராஜபக்ச குடும்பத்திற்காக குனிந்து கொடுக்கும் அரசாக மோடி அரசு உள்ளது என்று மாணிக்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உள்பட்ட நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகளை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி. மாணிக்கம் தாகூர் பேசியதாவது: நூறு நாள் வேலைத் திட்டம் வீண்னென்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கூறுகின்றனர். அவர்கள் நூறு நாள் வேலைத்திட்ட பணிகளை நேரடியாக வந்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் பேசியிருக்க வேண்டும். ஆனால், நேரில் வராமல் அது குறித்து எதுவும் தெரியாமல் குறை சொல்வது என்பது கண்டனத்துக்குரியது.
100 நாள் வேலை திட்டம் வருடத்திற்கு 365 நாட்கள் விவசாய பணிகள் நடைபெறும். இதை தவிர்த்து, மீதமுள்ள 100 நாட்கள் விவசாயப் பணிகள் இல்லாத நாட்கள் என்பதால் இந்த காலகட்டங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும். இதனைத் தெரியாமல், சினிமாவில் வசனம் பேசுவது போன்று சிலர் பேசி வருகிறார்கள்.
மோடி அரசு தொடர்ந்து தமிழர்களின் மனதை புண்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் துரத்தப்பட்டு., ஒரு மீனவர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை அமைச்சருக்கு, மத்திய அரசு மிக பிரமாண்டமாக வரவேற்பு கொடுப்பது, தமிழர்களின் எண்ணங்களை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தற்போதைய மோடி அரசு ராஜபக்ச குடும்பத்திற்கு குனிந்து கொடுக்கக்கூடிய ஒரு அரசாக உள்ளது என மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu