மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பணம் கைபேசி திருட்டு

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பணம் கைபேசி திருட்டு
X
பெரியார் பேருந்து நிலையம் அருகே பாத்ரூமுக்குள் அவசரமாக சென்றவரின் பணம் செல்போன் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பணம் செல்போன் திருட்டு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பாத்ரூமுக்குள் அவசரமாக சென்ற நபரிடம் பணம் செல்போன் திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பறையன் குளம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பதினெட்டாம் மகன் சூரியபிரகாஷ்( 20. ) இவர் ,மதுரை வந்திருந்தார். அவர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள பாத்ரூமுக்குள் அவசரமாகசென்ற போது தான் அணிந்திருந்த பேண்டடை கழட்டி அருகில் இருந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்களிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றார். அந்த பேண்டில் ரூபாய் 11500-ம் 11 ஆயிரம் மதிப்புள்ள செல்போனும் வைத்திருந்தார். பாத்ரூமிற்கு சென்று அவர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த மர்ம நபர்கள் 3 பேரும் பணம் மற்றும் செல்போனுடன் தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து, சூரியபிரகாஷ் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் திருடிய 3 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

செல்லூரில் ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

மதுரை தத்தனேரி போஸ்ட் ஆபீஸ் அருகே கடை ஒன்றில் புகையிலைப் பொருட்கள் விற்பதாக, செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது . சப்-இன்ஸ்பெக்டர் ரீகன் போலீசாருடன் சென்று அந்த கடையில் சோதனை நடத்தினார். அப்போது ,அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் சுப்பிரமணி 55 என்வரை கைது செய்தனர்.

பஸ்ஸில் இருந்து இறங்கிய பயணி தவறி விழுந்து உயிரிழப்பு

பஸ்சில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பயணி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . ஜெயந்திபுரம் நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்( 65.)இவர், டவுன் பஸ்சில் பயணம் செய்தார். பஸ் மதுரைக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது பஸ்சில் இருந்து இறங்கிபோது, கீழே விழுந்து அடிபட்டு மயங்கினார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, மகன் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!