மதுரை அருகே கண்மாயிலிருந்து நுரையுடன் கூடிய தண்ணீர்: பொதுமக்கள் அச்சம்.

மதுரை அருகே கண்மாயிலிருந்து நுரையுடன்  கூடிய தண்ணீர்: பொதுமக்கள் அச்சம்.
X

மதுரை அருகே கண்மாயிலிருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீர்

அவனியாபுரம் வெள்ளக்கல் கண்மாய் மறுகால் பாயும் நீரில் வெண்நுரை பொங்கி காற்றில் மிதப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணம் செய்கின்றனர்.

கண்களுக்கு அழகாய் தெரியும் வெண்நுரையால் விபத்து ஏற்படும் முன்னரே, காற்றில் பரவும் பகுதியில் தடுப்பு வேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மதுரையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், அவனியாபுரம் அயன் பாப்பாகுடி, வெள்ளக்கல் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது.

இந்த நிலையில், தொடர் மழையால், வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் , இப்பகுதிகளில் இருந்து சாயப்பட்டறை கழிவுநீரும் மழை நீரோடு கலந்து அயன்பாப்பாக்குடி கண்மாயில் பாசன கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

பகுதியிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீர்கள் கண்மாயில் கலப்பதால், அயல் பாப்பாக்குடி கண்மாயிலிருந்து வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக செல்வதால் மறுகால் பாயும் பாலத்தின் அருகில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதாலும் நீரின் வேகத்தை அந்த ஆகாயத்தாமரைகள் கட்டுப்படுத்தி வருகிறது.

இதனால், வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது. மேலும், வெண்நுரை மலை போல் பெருகி காற்றில் பறந்து அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால், வாகன ஓடிகளுக்கு இடையூறு மற்றும் விபத்தும் ஏற்படுத்தி வருகிறது வருகிறது.

இந்த ஆகாய தாமரைகளை அகற்றி, தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்தால் இதுபோன்ற நுரை பொங்கி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் பொதுப்பணித்துறை நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் கண்மாயிலிருந்து வெளியேறும் வெண்நுரை காற்றில் பரவாமல் தடுப்பு வேலிகள் அமைத்து விபத்து ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து கண்மாயில் கலக்கப்படும் கழிவு நீரை தடுத்து நிறுத்தினால் இதுபோன்ற வெண்நுரை பொங்கி காட்சியளிக்கப்படாது.

மேலும், இவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது படுவதால் இருசக்கர வாகன விபத்து ஏற்படுகிறது விண்ணுரை காற்றில் பரவுவதால் நான்குக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என வெள்ளக்கல் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story
பிஎஸ்என்எல் போட்ட  மாஸ்டர் பிளான்..!மாதம் 126 ரூபாய் பட்ஜெட்..ஒரு வருட வேலிடிட்டி!!பிஎஸ்என்எல் கொடுத்த ஹேப்பி நியூஸ்..