மதுரையில் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரையில் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
X
மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மதுரை மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்து பேசினார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.56 வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதிதாக கட்டப்பட்டுள்ள கலை அரங்க மேடை மற்றும் கரிமேடு சேதுபதி பாண்டித் துரை பள்ளியில் புதிதாக கட்டப் பட்டுள்ள கழிப்பறை கட்டிடத்தை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், (12.09.2024) பயன்பாட்டிற்கு திறந்து வைத்து தொடர்ந்து பள்ளி மாணவர் களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில்,மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாநகராட்சி மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மண்டலம் 3 வார்டு எண்.56 ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க மேடை, வார்டு எண்.56 கரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டிடத்தை, அமைச்சர், பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, சேதுபதி பாண்டித்துரை பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 28 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, அமைச்சர், வழங்கினார்.

அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக வழங்கப்படும் இதுபோன்ற நலத்திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என, மாணவ, மாணவிகளிடம், அமைச்சர், கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி,கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, செயற்பொறியாளர் சுந்தரராஜ், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம், இளநிலை பொறியாளர் ரமேஷ்பாபு, மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!