தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள்: சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மரியாதை

தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள்: சிலைக்கு  அமைச்சர்  மூர்த்தி மரியாதை
X

பரிமாற்கலைஞர் உருவச்சிலை

தமிழை "செம்மொழியாக" அறிவிக்கக்கோரி முதன்முதலில் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது

மதுரை திருப்பரங்குன்றம். அருகே விளாச்சேரியில் தமிழ் செம்மொழியாக குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர் 118- வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

சூரிய நாராயண சாஸ்திரி எனும் தனது பெயரை தமிழ் பற்றால் "பரிதிமாற் கலைஞர்" என பெயரை மாற்றிகொண்டார். ஏராளமான தமிழ் இலக்கிய நூல்கள், பல்வேறு மொழிபெயர்ப்புகள் என தமிழக்கு அருந்தொண்டாற்றியவர்.மேலும், தமிழை "செம்மொழியாக" அறிக்க கோரி முதன்முதலில் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் விளாச்சேரியில், பரிதிமாற் கலைஞர் நினைவிடத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு வணிகவரி, பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி மாலையணிவித்து மரியாதை செய்தார். அரசு சார்பில் மாலை மரியாதை செலுத்திய பின்னர், , பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story