மதுரை மேயர் முத்து பாலத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

மதுரை மேயர் முத்து பாலத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
X

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே மேயர் முத்து பாலத்தை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

மதுரை நகரில் பொதுப்பணித்துறை சார்பில் வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள மேயர் முத்து மேம்பாலத்தில், நடைபெறும் பணிகளை தமிழக பொதுப்

பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு , ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி .மூர்த்தி மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் . முன்னதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் மதுரை நகரில் பொதுப்பணித்துறை சார்பில் வரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி, திமுக பிரமுகர் அக்ரி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story