காலை உணவு திட்டத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பாராட்டு

காலை உணவு திட்டத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பாராட்டு
X

 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணிகளை பார்வையிட்டார்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணிகளை பார்வையிட்டனர்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு உறுப்பினரும்ஃஜான்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான சியாம் சிங் யாதவ் பாராட்டு தெரிவித்தார்

மதுரை மாவட்டத்தில், வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ள நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான நிலைக்குழு உறுப்பினர்கள், மதுரை மாநகராட்சி, சாத்தமங்கலம் நடுநிலைப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணிகளை பார்வையிட்டு, நெல்பேட்டையில் உள்ள காலை உணவு திட்டம் முலம் பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டார்கள்.

நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும்ஃதூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பி.சின்ராஜ் , தராஜ்வீர் தில்லர், நரேந்திர குமார், தலாரி ரங்கையா , கீதாபென் வஜெசிங்பாய் ரத்வா, சியாம் சிங் யாதவ் , எம்.முகமது அப்துல்லா, இராண்ணா கடாடி , நரன்பாய் ஜெ.ரத்வா, அஜய் பிரதாப் சிங் ஆகிய நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பெருமக்கள் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

அதன்படி இரண்டாம் நாள் சுற்றுப் பயணமான இன்று , நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும்ஃதூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான நிலைக்குழு உறுப்பினர்கள், மதுரை மாநகராட்சி, சாத்தமங்கலம் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணிகளை பார்வையிட்டார்கள்.

மேலும், குழந்தைகளுடன் சேர்ந்து உணவு அருந்தி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து , நெல்பேட்டையில் உள்ள காலை உணவு திட்டம் முலம் பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டார்கள்.

அதன்பின்பு, நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு உறுப்பினரும்ஃஜான்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான (உத்திரப்பிரதேசம்) சியாம் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்வின் இரண்டாம் நாளான இன்று தமிழ்நாடு மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புத் திட்டமான ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

சாத்தமங்கலம் பகுதியில், உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து காலை உணவு அருந்தினோம். உணவு ஊட்டச் சத்து மிகுந்து தரமாகவும் , ருசியாகவும் இருந்தது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் அதிகளவில் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இக்குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இத்திட்டத்தின் மூலம் , தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும், மாணவர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இத்தகைய மகத்தான திட்டத்தை செயல் படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எனது மனமார்ந்த பாராட்டுக் களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என, நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு உறுப்பினரும், ஜான்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான சியாம் சிங் யாதவ் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி , மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜ் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!