மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் ,மேயர் ஆய்வு.
மதிப்பீட்டு குழுவினருடன் மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு.
மதுரை:
மதுரை மாநகராட்சி திருப்பாலை ஜி.ஆர்.நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டு குழுவினருடன் மாண்புமிகு மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு மேற்கொண்டார்.
தேசிய தரச்சான்று திட்டம் (NQAS – National Quality Assurance Standards) ஆனது ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மேம்பாட்டுக்காக நடத்தப்படும்
திட்டமாகும். இத்திட்டமானது சுயமதிப்பீடு, மாநில அரசின் மதிப்பீடு மற்றும் ஒன்றிய அரசின் மதிப்பீட்டை தொடர்ந்து சான்று வழங்கப்படும். மதுரை மாநகராட்சி மஸ்தான்பட்டி, முனிச்சாலை, ஆனையூர், அண்ணாத்தோப்பு, திருநகர், செல்லூர் ஆகிய ஆறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தேசிய தரச்சான்றிதழ் கடந்த ஆண்டில் வழங்கப் பட்டுள்ளது. அதன்படி கடந்த 20.09.2024 அன்று வண்டியூர் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் தொடர் நிகழ்வாக, தற்போது தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டு குழுவினர் திருப்பாலை ஜி.ஆர். நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகம், மருந்துகள் இருப்பு, பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் குறித்து முழுமையாக தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்வதை மேயர், நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டு குழுவினர் மரு.அனோஜ், மரு.சித்பி காட்வால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், நகர்ப்புற உதவி திட்ட மேலாளர் மரு.ஸ்ரீகோதை, மண்டல மருத்துவ அலுவலர் மரு.லெட்சுமிகாந்தன், மருத்துவ அலுவலர் மரு.ஜமீலா பாத்திமா, உதவிப்பொறியாளர் முருகன், சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், மருத்துவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu