மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் பாராட்டு
தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற வினாடி வினாமற்றும் தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதுரை மேயர் இந்திராணிபொன்வசந்த் பாராட்டு.
மதுரை மாநகராட்சி, தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற வினாடி வினாமற்றும் தடகள விளையாட்டு போட்டிகளில்வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு மேயர் இந்திராணிபொன்வசந்த் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற வினாடி வினா மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி எம்.மாரிச்செல்வி, சுந்தராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவன் எம்.சரவணபாண்டியன் ஆகியோரை,Mayor Indrani Ponvasant and Commissioner Simranjeet Singh congratulated.
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி எம்.மாரிச்செல்வி, தேசிய அளவில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்தியபிரதேசம் மாநிலம் போபால் நகரில் நடைபெற்ற 17 வது இளையோர் தேசிய தடகள போட்டியில் தொடர் ஓட்டம் (200மீ) வெண்கலப் பதக்கமும், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தி நகரில் நடைபெற்ற 37வது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன் போட்டியில், தொடர் ஓட்டம் (400மீ) இறுதிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்தியபிரதேசம் மாநிலம் போபால் நகரில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு தொடர் ஓட்டம் (400மீ) போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். மாநில அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில், சுந்தராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் எம்சரவணபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மேயர், ஆணையாளர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும், தேசிய திறனாய்வு தேர்வில், தேர்ச்சி பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் அபிஜீத்ராஜ் , சுருதிகா, தனிஷா சாதனா, மோனிஷா, பாலமணிகண்டன், கௌஷிகா சாம்ரீன்ஜமீலா, தனிஷா, பாண்டிச்செல்வி ஆகிய 10 மாணவ, மாணவிகளையும் மேயர், ஆணையாளர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி,கல்வி அலுவலர் நாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் தலைமை ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu